- அண்ணா பல்கலைக்கழகம்
- திமுகா எம். பி.
- சென்னை
- திமுகா
- பி. கனிமோஜி
- பொள்ளாச்சி
- திமுக எம். பி. கன்னிலாங்கி கிராதசட்டு
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சி செய்கின்றனர் என திமுக எம்.பி. கனிமொழி பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பொள்ளாச்சி விவகாரத்தில் கடந்த ஆட்சியாளர்கள் அமைதி காத்தனர். அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு நடவடிக்கை எடுத்த பிறகும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. முதல் தகவல் அறிக்கை கசிவு சம்பவத்திலும் தமிழக அரசை குற்றஞ்சாட்டி அரசியல் செய்கின்றனர். இணையதளம் கோளாறு காரணமாகவே முதல் தகவல் அறிக்கை வெளியானது. ஆட்டு மந்தையில் இருந்தது பாஜகவினரின் விருப்பம்; அதில் நான் என்ன கருத்து கூறுவது?.ஆட்டு மந்தையில் பாஜகவினரை காவல் துறை ஏன் அடைக்க போகிறது?. பிரதமர் மோடி மணிப்பூர் இதுவரை ஏன் செல்லவில்லை கேள்வி எழுப்பினார்.
மேடையில் ஏறி என்ன வேண்டுமானாலும் பேசலாம்
மேடையில் ஏறி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; நிதர்சனத்தில் சாத்தியப்படுத்த முடியுமா?. மக்கள் பிரச்சினைகளை நேரில் சென்று கேட்க முடியாதவர்கள் மேடையில் முழங்குகிறார்கள். வாக்குறுதிகளை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்; நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே முக்கியம். ஆட்சி செய்ய தெரிந்தவர்களுக்கு மட்டுமே நிதர்சனத்தில் எது சாத்தியம் என்பது புரியும் இவ்வாறு தெரிவித்தார்.
The post அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சி செய்கின்றனர்: திமுக எம்.பி. கனிமொழி குற்றசாட்டு appeared first on Dinakaran.