×

முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட சிறுமி டானியாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை ஆவடி அருகே முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட சிறுமி டானியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கி உதவிக்கரம் நீட்டி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டிபன் ராஜ் சவ்பாக்கியா தம்பதியின் மூத்த தம்பதியான டானியா முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அவதி உற்றார். இதை அறிந்த முதலமைச்சர் அவரது மருத்துவ செலவு முழுவதையும் ஏற்று உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் டானியா குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் இலவசமாக 3 சென்ட் மனையை வழங்கி அதில் வீடுகட்டி தரவும் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் முடிந்ததை அடுத்து வீட்டிற்கான சாவியை குடும்பத்தினரிடம் முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார். அரசு சார்பில் வீடு கட்டி கொடுத்ததற்காக முதலமைச்சருக்கு டானியா குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர். தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாணவீடு தோட்டம் கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி பெண் ஒருவருக்கு தானியங்கி சக்கர நாற்காலியையும் முதலமைச்சர் வழங்கினார்.

The post முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட சிறுமி டானியாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Dania ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Avadi, Chennai ,Stipan Raj Chawbakiya ,Weerapuram ,Thiruvallur district ,Dania Muksidaivu ,M.U. ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்...