- ஆங்கிலப் புத்தாண்டு
- வையாவூர் தெற்கு திருப்பதி கோவில்
- வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
- திருமலா
- தெற்கு திருப்பதி
- திருமலை வையாவூர் அலர்மேல் மங்கல
- பட்டாலம்
- செங்கல்பட்டு
மதுராந்தகம், ஜன.1: தென் திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, இன்று படி பூஜை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை வையாவூர் அலர்மேல் மங்கா நாயகா சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டு விழா இன்று காலை படி பூஜையுடன் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி, கோயில் ராஜகோபுரம், சன்னதிகள், விமானங்கள் ஆகியவை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆங்கில புத்தாண்டு தினமான இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கும் நிகழ்ச்சியில் அதிகாலை 3 மணி அளவில் படி பூஜை நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, பிரசன்ன வெங்கடேச பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், தாயார், கருடாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு வஜ்ரங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் தினேஷ், முன்னாள் அறங்காவலர் ஏழுமலை, செயல் அலுவலர் மேகவண்ணன், பட்டச்சாரியார் பாலாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஏழுமலை உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
The post ஆங்கில புத்தாண்டையொட்டி வையாவூர் தென் திருப்பதி கோயிலில் இன்று படி பூஜை appeared first on Dinakaran.