×

சிஆர்பிஎப் டிஜி அனிஷ் தயாள் ஓய்வு

புதுடெல்லி: சிஆர்பிஎப் இயக்குனர் ஜெனரல் அனிஷ் தயாள் சிங் நேற்று பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். மணிப்பூரை சேர்ந்த 1988 பேட்ச் அதிகாரியான இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் சிஆர்பிஎப்புக்கு பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் 4 புதிய பட்டாலியன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சட்டீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 4000க்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.அனிஷ் தயாள் சிங் நேற்று பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து மூத்த ஐபிஎஸ் அதிகாரியான விட்டல் குமார் சிஆர்பிஎப் பொறுப்பு தலைவராக பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சிஆர்பிஎப் டிஜி அனிஷ் தயாள் ஓய்வு appeared first on Dinakaran.

Tags : CRPF ,Anish Dayal ,New Delhi ,Director General ,Anish Dayal Singh ,Manipur ,Dinakaran ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு