×

சபரிமலை மகரவிளக்கு பூஜைகள் ஜனவரி 15ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்தது

திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்தார். முதல் நாளிலேயே தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்குள் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று முதல் மகரவிளக்கு பூஜையின் மறுநாளான ஜனவரி 15ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிவடைந்து விட்டது. இதற்கிடையே மகரவிளக்கு பூஜையை ஒட்டியுள்ள நாட்களில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஜனவரி 12 முதல் 14 வரை உடனடி முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கான சிறப்பு பாஸ் திடீர் நிறுத்தம்
எருமேலி (பெரிய பாதை) மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு உடனடியாக தரிசனம் செய்வதற்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் பாதையில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட 5 மடங்கு வரை உயர்ந்தது. இதனால் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக எருமேலி மற்றும் புல்மேடு வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாஸ் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

The post சபரிமலை மகரவிளக்கு பூஜைகள் ஜனவரி 15ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்தது appeared first on Dinakaran.

Tags : Sabarimala Maharalaka Pooja ,Thiruvananthapuram ,Sabarimalai Aiyappan Temple ,Maharagalaka Kala Pujas ,Melshanti Arunkumar ,Namboothri walk ,Thantri Khandar Rajeevara ,Sabarimala Maharagala Pooja ,
× RELATED எருமேலி மற்றும் புல்மேடு வனப்பாதை...