தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைப்பதே என் வாழ்நாள் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25வது ஆண்டு வெள்ளிவிழாவையொட்டி, இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறை இடையே கடல் நடுவே ரூ.37 கோடியில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சூழும் பகுதியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. இதன் 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம், தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று தொடங்கியது

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சி தொடங்கியது. வெள்ளி விழாவில் திருவள்ளூர் பசுமைப்பூங்கா, திருக்குறள் கண்காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வள்ளுவர் தோரணவாயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அடிக்கல் நாட்டினார். கடற்கரைச் சாலைக்கு திருவள்ளுவர் சாலை எனப் பெயர் சூட்டியுள்ளார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை முதலமைச்சர் வெளியிட்டார். சிறப்பு மலரை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் உருவான வள்ளுவ மாலை பாடலை வெளியிட்டார்.

பின்னர் முதலமைச்சர் பேசுகையில் என் வாழ்நாளில் சிறந்த நாளாக கருதுகிறேன்.வள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பது கலைஞரின் நீண்டநாள் கனவாக இருந்தது என்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூறியுள்ளார்.

கலைஞர் வைத்த சிலையை போற்றக்கூடிய வகையில் வெள்ளி விழாவை திராவிட ஆட்சியில் நடத்தியதில் பெருமைப்படுகிறேன். வள்ளுவர் சிலை தொடங்கி கலைஞர் செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கலைஞர் வழியில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் உழைப்பதுதான் எனது கடமை

சிலை அமைத்ததற்கு எதற்கு விழா என்று சில அதிமேதாவிகள் கேட்டனர். வள்ளுவர் தமிழின் உலக அடையாளம், திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம், அதனால் கொண்டாடுகிறோம், கொண்டாடுவோம். ரூ.37 கோடி மதிப்பிலான கண்ணாடி இழை பாலத்தை நேற்று திறந்து வைத்தேன். 12 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றக்கூடிய வகையில் 3டி காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

நம் மதம் குறள் மதம், நம் நெறி குறள் நிெ என்று கூறியவர் பெரியார். குறள் என்பது வகுப்பறையில் மட்டுமல்லாது உங்கள் இல்லங்களில் உள்ளங்களில் பரவ வேண்டும் என்று கூறினார் அண்ணா. திருக்குறள் தலைவராகவே வலம் வந்தார் கலைஞர். கலைஞர் பள்ளிப்பருவம் முதல் ஆட்சியில் இருந்தது வரை திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளித்தார். பேருந்துகளில் திருக்குறள், அரசு நிகழ்ச்சிகளில் திருக்குறள், வள்ளுவர் கோட்டம் கட்டியவர் கலைஞர். கலைஞரின் எண்ணத்துக்கு உருவம் கொடுத்தவர் கணபதி ஸ்தபதி.

திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் படகுக்கு காமராஜர் பெயரும், 2-வது படகுக்கு மார்சல் நேசமணி பெயரும், 3-வது படகுக்கு ஜி.யு.போப் பெயரும் வைக்கப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

மாவட்டந்தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும். ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும். தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுதப்படுவதற்கு ஊக்குவிக்கப்படும். திருக்குறளும், திருவள்ளுவர் சிலையும் நம் வாழ்க்கையை காக்கும் கேடயம். நம்மை அழிக்க நினைக்கும் தீமைகளை தடுக்கும்.

The post தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைப்பதே என் வாழ்நாள் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: