×

பெரம்பலூர் உழவர்சந்தையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு

பெரம்பலூர், ஜன.3: பெரம்பலூர் உழவர் சந்தையில் பீன்ஸ் கிலோ ரூ100, கோழி அவரை கிலோ ரூ160. முருங்கைக் காய் இரட்டை சதமடித்தது. உழவர் சந்தையிலேயே காய்களிகள் விலை உயர்ந்திருப்பதால் ஊரகப் பகுதிகளில் விலை உச்சத்தை தொட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்மஸ் புத்தாண்டு தினங்களில் இறைச்சிகளுக்கு அதிக வரவேற்பு காணப் பட்டாலும், இனி வரக்கூடிய பொங்கல் பண்டிகை வரை, சைவ உணவுகளுக்கே அதிக மவுசு ஏற்படும் என்பதால் காய்கறிகள் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது. பொதுவாக மாவட்டத்தின் கிராமப் புறங்களில், கடைகளில், வாகனங்களில் தள்ளு வண்டிகளில் விற்கப்படும் காய்கறிகள்,பெரம்பலூரில் பழைய பஸ்டாண்டு அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு வாங்கிச்சென்று விற்கப் படுவதால் தினசரி காய்கறி மார்க்கெட் விலையை விட சற்று கூடுதலாக விலை வைத்தே விற்கப்படும்.

அதேசமயம் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் இயங்கி வரும் உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகள், விவசாயிகளி டமிருந்து நேரடியாக விற் கப்படுவதால், வியாபாரிக ளைக்கொண்டு இயங்கும் பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டின் விலையில் 20 சதவீதம் குறைவாக விலைவைத்தே விற்கப்படும். இதனால் பெரம்பலூர் உழவர் சந்தைக்கு தினமும்ஆயிரக் கணக்கானோர் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. மிகக் குறைவாக விலை வைத்து விற்கப்படும் உழவர் சந்தையிலேயே தற்போது காய்கறிகள் அரை சதம், ஒரு சதம், ஒன்றரை சதம், இரண்டு சதம் அளவிற்கு விலை வைத்துவிற்கப்படுவதால் இல்லத்தரசிகள் பாடு பெரும்பாடாகி உள்ளது.

குறிப்பாக பெரம்பலூர் உழவர் சந்தையில் நேற்று (வியாழக் கிழமை) விலை நிலவரப் படி, கத்தரிக்காய் 56, பாகற்காய் 60, பீர்க்கங்காய் 72, கொத்தவரங்காய் 52, கருணைக்கிழங்கு 64, சேனைக்கிழங்கு 52, சேப்பங்கிழங்கு 56, சர்க்கரைவள்ளிக் கிழங்கு 60, நெல்லிக்காய் 84, மொச்சை 96, கோவக்காய் என்பது, கேரட் 68, கரு வேப்பிலை 70, இஞ்சி 60, தட்டைக்காய் 52, என அரை சதத்திற்குமேல் விலை வைத்து விற்கப்பட்டது.

பீன்ஸ் 100, மாங்காய் 100, பச்சை பட்டாணி 116, கோழி அவரை 160 என ஒன்றரை சதத்திற்கு மேல் விலை வைத்து விற்கப் படும் நிலையில், முருங் கைக்காய் இரட்டை சதம் அடித்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. போகப் போக பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் மேலும்விலைஅதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. உழவர் சந்தையிலேயே உயர்ந்திருப்பதால் அதனை வாங்கிச் சென்றுஊரகப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறியின் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து உச்சத்தில் நிற்கிறது. இதனால் இல்லத்தரசிகள் இப்போதைய விலை ஏற்றத்திற்கு பேசாமல் இறைச்சியையே வாங்கி சமைத்து விடலாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

The post பெரம்பலூர் உழவர்சந்தையில் காய்கறிகள் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur Uzhava Market ,Perambalur ,Uzhava Market ,Christmas ,New Year ,Dinakaran ,
× RELATED காய்கறிகளை சேமித்து வைக்க வசதியாக...