×

வர்னர் வருகையையொட்டி கல்வெட்டு கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

 

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் பிரசித்தி பெற்ற குடவோலை முறை கல்வெட்டு கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ வைகுண்ட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கி.பி 920ம் ஆண்டில் குடவோலை தேர்தல் விதிமுறைகள் குறித்து கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய வரலாற்றில் ஒரு சிறந்த ஆவணமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கல்வெட்டு கோயிலுக்கு இன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பார்வையிட வருகை தருகிறார். இதனால் நேற்று கவர்னர் பார்வையிட உள்ள கோயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

The post வர்னர் வருகையையொட்டி கல்வெட்டு கோயிலில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Varna ,Uthiramerur ,Sri Vaikunda Varadaraja Perumal Temple ,Uthiramerur Bazaar Road ,Parantaka ,Chola I ,Kudavolai ,
× RELATED கவர்னர் வருகையையொட்டி கல்வெட்டு கோயிலில் அதிகாரிகள் ஆய்வு