அரியலூர், டிச. 30: அரியலூர் – செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சரவணன் ஆய்வு செய்தார். அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள செந்துறை (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர்- ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் 24/0 – 30/0 வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர், சாலையோரம் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின் போது உடன் விழுப்புரம் கண்காணிப்பு பொறியாளர் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அரியலூர் கோட்டப்பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, விழுப்புரம் கோட்டப்பொறியாளர் (நெ) தரக்கட்டுப்பாடு, விழுப்புரம் கோட்டப்பொறியாளர் (நெ)சாலைப்பாதுகாப்பு , செந்துறை (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, உதவிக்கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் அரியலூர் (நெ) தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப்பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post அரியலூர் – ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலை மேம்பாட்டு பணிகள்: நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.