×

தஞ்சாவூர்-பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக 3ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி மன்றத்தில் பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், 3ம் தேதி காலை 10 மணியளவில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமையிலும்; தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஊ.ஏ.சேகர் முன்னிலையிலும் நடைபெறும்.

The post தஞ்சாவூர்-பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக 3ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thanjavur-Peravoorani Town Panchayat ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,Peravoorani Town Panchayat Council ,Thanjavur ,AIADMK Thanjavur South ,Dinakaran ,
× RELATED தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு