×

சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்ட ஏர் அரேபியன் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: விமானம் பத்திரமாக தரையிறக்கம்

சென்னை: சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 5 மணிக்கு, 178 பேருடன் புறப்பட்டு, நடுவானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார்.

இதையடுத்து விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து, தரையிறக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த விமானம் மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமான பொறியாளர் குழுவினர், விமானத்தை பழுது பார்த்தனர். பின்பு சுமார் 4 மணி நேரம் தாமதமாக, நேற்று காலை 9 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.

The post சென்னையில் இருந்து அபுதாபி புறப்பட்ட ஏர் அரேபியன் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: விமானம் பத்திரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abu Dhabi ,Air Arabian Airlines ,
× RELATED நடுவானில் தொழில்நுட்ப கோளாறு : அபுதாபி சென்ற விமானம் தரையிறக்கம்