புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். இதற்கு நுழைவுக் கட்டணமாக பொதுமக்களுக்கு ரூ.10 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். புத்தகக்காட்சி தொடங்கிய முதல் வார இறுதி நாளான நேற்று பெரும்பாலான வாசகர்கள் புத்தக காட்சியை நோக்கி படையெடுத்தனர். நேற்று சனிக்கிழமை என்பதால் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் என பலர் புத்தகக் காட்சிக்கு வருகை புரிந்து தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி சென்றனர்.
இந்த புத்தகக் காட்சியில் தினகரன்- சூரியன் பதிப்பகத்திற்கு இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகள் 329, 330 என்ற எண்களில் அமைந்துள்ளன. இந்த அரங்கில் விற்பனை செய்யப்படும் கர்ணனின் கவசம், தல புராணம், பேசும் சித்திரங்கள், மருதம் மீட்போம், உங்களுக்கு நீங்களே டாக்டர், மகளிர் மருத்துவம், உயிர் பாதை உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது, மாணவர்களுக்கான புத்தகங்கள், மருத்துவம் சார்ந்த புத்தகம், பெண்களுக்கான சிறுகதைகள், சமையல் புத்தகம், ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் புத்தகங்களை வாசகர்கள் விரும்பி வாங்கிச் சென்றனர்.
The post சென்னை புத்தகக் கண்காட்சியில் அலைமோதிய மக்கள் கூட்டம்: புத்தகங்களை வாங்க வாசகர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.