×

பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தில் கிராம மக்கள் திடீர் மறியல்

பண்ருட்டி, டிச. 28: ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து எல்.என்.புரம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் எல்.என்.புரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், நேற்று காலை பண்ருட்டி-சென்னை சாலை எல்.என்.புரத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பண்ருட்டி-சென்னை சாலையில் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணபடும் என போலீசார் கூறியதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பண்ருட்டி அருகே எல்.என்.புரத்தில் கிராம மக்கள் திடீர் மறியல் appeared first on Dinakaran.

Tags : L.N. Puram ,Panruti ,L.N. ,Puram ,Dinakaran ,
× RELATED கண்காணிப்பு கேமராவுடன் பறந்து வந்த கழுகு