- சங்கராபுரம்
- பெங்களூரு
- கொளஞ்சி
- பரமநத்தம் கிராமம்
- மூரர்பாளையம் ரோடு
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- சரத் குமார்
சங்கராபுரம், டிச. 28: சங்கராபுரத்தில் மகனை கொடுவாளால் வெட்டிவிட்டு பெங்களூருவில் பதுங்கியிருந்த தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் ரோடு பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (53). இவரது மகன் சரத்குமார்(31). சமீபகாலமாக அடிக்கடி மதுஅருந்தி விட்டு வீடு திரும்பிய மகனை கடந்த 22ம் தேதி கொளஞ்சி தட்டிக் கேட்டாராம். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த கொளஞ்சி, தனது மகன் சரத்குமாரை விறகு வெட்டும் கொடுவாளால் சரமாரி கழுத்து மற்றும் தலை பகுதிகளில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரத்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் ெதாடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
இச்சம்பவம் குறித்து சரத்குமாரின் தாய் பெரியம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் கொளஞ்சி மீது கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்குபதிந்த சங்கராபுரம் போலீசார், தலைமறைவான கொளஞ்சியை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் கிளாஸ்பாளையம் பூ மார்க்கெட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீசார் சென்று நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் சங்கராபுரம் அழைத்து வந்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை தந்தையே கொடுவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மகனுக்கு கொடுவாள் வெட்டு தந்தை அதிரடி கைது appeared first on Dinakaran.