×

கிருஷ்ணகிரி அருகே பெண் கடத்தல்

கிருஷ்ணகிரி, டிச.25: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி சாமந்தமலை ஒண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார்(37). இவரது மனைவி வித்யா (33). அதே பகுதியை சேர்ந்தவர் பிலிப். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், வித்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனையறிந்த சம்பத்குமார், மனைவியை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு, பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வித்யா சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற வித்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி சம்பத்குமார் குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில், பிலிப் ஆசைவார்த்தை கூறி தனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம் எனவும், அவரை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே பெண் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Sampathkumar ,Ondiyur ,Guruparapalli Samanthamalai ,Vidhya ,Philip ,
× RELATED அரசு ஊழியர்களின் சொத்து, கடன் குறித்த...