விஜய் ஹசாரே கோப்பை உ.பி.யை வென்ற தமிழகம்

விசாகப்பட்டினம்: விஜய் ஹசாரே கோப்பைக்காக விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நாள் போட்டியில் தமிழ்நாடு – உத்தரப்பிரதேசம் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி, 47 ஓவராக சுருக்கப்பட்டது. முதலில் ஆடிய தமிழ்நாடு 5 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. ஷாருக்கான் அவுட்டாகாமல் 132 ரன் எடுத்தார். பின்னர் ஆடிய உத்தரப்பிரதேசம் 32.5 ஓவரில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியை அடுத்து, புள்ளிப் பட்டியலில் ‘டி’ பிரிவில் தமிழ்நாடு 6 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 8 புள்ளிகளுடன் விதர்பா உள்ளது.

The post விஜய் ஹசாரே கோப்பை உ.பி.யை வென்ற தமிழகம் appeared first on Dinakaran.

Related Stories: