- தமிழ்
- தமிழ்நாடு
- கவர்னர்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- திருமலா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆர்.என்.ரவி
- பிவி சிந்து
- ஏழுமலையான் கோவில்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அதேபோல் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தனது கணவர், குடும்பத்தினருடன் இன்று ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். கோயிலில் தரிசனம் செய்த கவர்னர் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை தம்பதிகளுக்கு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தபோது, திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை நிர்வாகக்குழு தலைவர் சேகர்ரெட்டி உடன் இருந்தார்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக கவர்னர், பேட்மிண்டன் வீராங்கனை சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.