×

மணிப்பூரில் துப்பாக்கி சூடு, வெடிகுண்டு தாக்குதல்

இம்பால்: மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சனாசாபி மற்றும் தம்னாபோக்பி கிராமங்களில் நேற்று மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மலைகளில் இருந்து வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதோடு, வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். நேற்று காலை 11.30 மணியளவில் சனசாபி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதோடு வெடிகுண்டுகளையும் மர்மநபர்கள் வீசியுள்ளனர். இதேபோல் காலை 11.30மணியளவில் தம்னாபோக்பி கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. மர்மநபர்களின் தாக்குதல்கள் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் மர்மநபர்களுக்கு எதிராக பதிலடி கொடுத்தனர். இரண்டு கிராமங்களிலும் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களினால் பீதி அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த தாக்குதல்களில் ஒரு காவலர் உட்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மணிப்பூரில் துப்பாக்கி சூடு, வெடிகுண்டு தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Firing ,Manipur ,Imphal ,Sanasabi ,Tamnabogbi ,Imphal East ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு