×

2025ல் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்: ஒன்றுதான் இந்தியாவில் தெரியும்

இந்தூர்: 2025ல் ஏற்படும் 4 கிரகணங்களில் ஒன்று மட்டுமே இந்தியாவில் தெரியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஜிவாஜி ஆய்வக மூத்த அதிகாரி டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது, “வரும் 2025ல் இரண்டு சூரிய கிரகணங்கள், இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும். இதில் மார்ச் 14ம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படும். இந்த வானியல் நிகழ்வு பகலில் ஏற்படும் என்பதால் இந்தியாவில் தெரியாது. மார்ச் 29ம் தேதி பகுதிநேர சூரிய கிரகணம் ஏற்படும். இதையும் இந்தியாவில் பார்க்க முடியாது. செப்டம்பர் 7 – 8க்கு இடையே ஒரு சந்திர கிரகணம் ஏற்படும். இது முழு சந்திர கிரகணமாகும். இந்த நிகழ்வை இந்தியாவில் காண முடியும் என்பதால் இந்திய வானியல் ஆர்வலர்கள் உற்சாகமாக உள்ளனர். இந்த ஆண்டில் இறுதி கிரகணம் செப்டம்பர் 21 – 22க்கு இடையே பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும். இதையும் இந்தியாவில் காண முடியாது. இவ்வாறு தெரிவித்தார்.

The post 2025ல் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்: ஒன்றுதான் இந்தியாவில் தெரியும் appeared first on Dinakaran.

Tags : 2 ,eclipses ,India ,Indore ,Dr. ,Rajendra Prakash Gupta ,Jiwaji Laboratory ,Ujjain, Madhya Pradesh ,
× RELATED ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி: பிப்.23-ம்...