×

“பாம்பன் புதிய ரயில் பாலம் 100% தயார்” : தெற்கு ரயில்வே அதிகாரி

ராமேஸ்வரம் : பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் 100% தயாராக உள்ளது என்று தெற்கு ரயில்வே அதிகாரி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ” பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும். பாம்பன் புதிய பாலத்தில் 75 கி.மீ. வேகத்தில் ரயில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தினர். கப்பல் செல்வதற்காக தூக்கு பாலத்தை மேலே எழுப்பி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post “பாம்பன் புதிய ரயில் பாலம் 100% தயார்” : தெற்கு ரயில்வே அதிகாரி appeared first on Dinakaran.

Tags : Pampan ,Southern Railway ,Rameswaram ,Srinivasan ,Pamban sea ,
× RELATED ஆர்-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை: தெற்கு ரயில்வே தகவல்