வேலை கேட்ட வாலிபர்கள் மீது தடியடி நடத்தியது கொடுமையின் உச்சம்: பிரியங்கா விமர்சனம்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் கடந்த 13ம் தேதி நடந்த அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வு முறைகேட்டை கண்டித்து பாட்னாவில் நேற்று முன்தினம் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். வேலை தேடுபவர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தி இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது வாட்ஸ்அப் சேனலில் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்படுவது கொடுமையின் உச்சமாகும். பாஜ ஆட்சியில் வேலைவாய்ப்பு கோரிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்படுகின்றது. உத்தரப்பிரதேசமாக இருந்தாலும் சரி, பீகார் அல்லது மத்தியப்பிரதேசமாக இருந்தாலும் இளைஞர்கள் குரல் எழுப்பினால் அவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள்” என குறி ப்பிட்டுள்ளார்.

The post வேலை கேட்ட வாலிபர்கள் மீது தடியடி நடத்தியது கொடுமையின் உச்சம்: பிரியங்கா விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: