மும்பை: மும்பையில் 10 நிமிட பயணத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியரிடம் ரூ.2800 கட்டணம் வசூலித்த வாடகை கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்ல 10 நிமிட பயணத்துக்கு கார் ஓட்டுநர் ரூ.2800 வசூலித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர் விஜய் புகாரின்பேரில் கார் ஓட்டுநர் வினோத் கோஸ்வாமியை போலீசார் கைது செய்தனர்.