ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் துவங்காத உறைபனி சீசன் தற்போது மாத கடைசியில் மிக தாமதமாக துவங்கியுள்ளது. இதற்கு வழக்கத்தைவிட இந்த ஆண்டு பருவமழை அதிகளவு பெய்தததே காரணமென கூறுகின்றனர். மிக தாமதமாக துவங்கினாலும் உறைபனியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறைபனி அதிகளவில் கொட்ட துவங்கி உள்ளது. இதனால் கொடைக்கானல் ஏரி பகுதி மற்றும் மலைப்பகுதிகளின் பல இடங்களில் தற்போது வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் காட்சியளிக்கிறது.
இந்த உறைபனி தாக்கத்தால் ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வெயில் வந்தபிறகே நடைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏரி பகுதி சிறு வியாபாரிகள் கடைகளை தாமதமாகவே திறந்து வருகின்றனர். கொடைக்கானலில் நிலவும் கடுங்குளிர் காரணமாக உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு காலையில் தாமதமாகவே தங்களது பணிகளை துவக்கி வருகின்றனர். அதுபோல மாலை நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் விரைவில் தங்களது பணிகளை முடித்து விடுகின்றனர்.
இதுதவிர பகல் பொழுதில் கம்பளி ஆடைகள் ஜெர்கின், ஸ்வெட்டர், மப்ளர், கையுறைகள் அணிந்து செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இதுபோல இரவு நேரங்களில் வீடுகளில் ஹீட்டர் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தியும், இரவில் படுக்கையில் கம்பளிகளை கூடுதலாக பயன்படுத்துவதுடன், கோல்டு கிரீம் உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இருப்பினும், உறை பனி சீசனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
The post தாமதமாக துவங்கினாலும் தாக்கம் குறையவில்லை உறைபனியில் உருகும் மலைகளின் இளவரசி: கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.