கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ.2,800-க்கு விற்பனை ஆகிறது. பிச்சிப்பூ ரூ.500 உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.