இக்கூட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளர் அதுல் ஆனந்த், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், கூடுதல் ஆணையர் சிவசௌந்திரவள்ளி மற்றும் துறை உயர் அலுவலர்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலளாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: கடந்த 3 1/2 ஆண்டு காலத்தில் எம்எஸ்எம்இ துறையில் ரூ.1805 கோடியே 31 லட்சம் மனியத்துடன், ரூ.4601.76 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டு 52,128 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
5 வகையான சுய வேலைவாய்புத் திட்டங்களின் கீழ் பட்டியல் இனத்தவர், மகளிர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை, சில மாவட்டங்கள் எய்தாமல் உள்ளன. ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, அவர்கள் மூலமாக தொழில் முனைவோர் பட்டியல்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதல்வரின் சிறப்பு திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும். அண்மையில் அறிவிக்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை கைவினைக் கலைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்புக்கு மானியம் வழங்கும் பிஎம்எப்எம்இ திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எம்எஸ்எம்இ துறையால் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 42% நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கிள் விண்டோ இணையதளத்தில் வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து, அனைத்து விண்ணப்பங்களுக்கும் உரிய நேரத்தில் அனுமதி பெற்றுதர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post கடந்த மூன்றரை ஆண்டில் 52,128 புதிய தொழில் முனைவோர் உருவாக்கம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.