இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதற்கிடையே டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனா உள்பட அப்போது இருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள், ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மனித குலம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக அவர்கள் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதால் அவரை நாடு திரும்ப தற்போது வங்கதேச அரசு இந்தியாவுக்கு வாய்மொழி கோரிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச வெளியுறவு ஆலோசகர் கூறுகையில், நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ஷேக் ஹசீனாவை வங்கதேசம் திரும்ப வாய்மொழியாக இந்தியாவுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக வங்கதேச உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் கூறுகையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைள் தற்போது செயல்பட்டு வருகிறது. டாக்கா மற்றும் டெல்லி இடையே ஏற்கனவே ஒப்படைப்பு ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி, ஷேக் ஹசீனாவை வங்கதேசம் கொண்டுவர முடியும்” என்று கூறினார்.
The post முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்.! இந்தியாவுக்கு வங்கதேச அரசு மீண்டும் கோரிக்கை appeared first on Dinakaran.