அரையாண்டு தேர்வு நிறைவு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட தயாராகும் மாணவ, மாணவிகள்

திருப்பூர் : தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு கடந்த 9ம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இதேபோல் 10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கடந்த 10ம் தேதி தொடங்கிய தேர்வுகள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு கடந்த 9ம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.

அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் நாளைய தினம் முதல் ஜனவரி 1ம் தேதி வரை மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.தனித்திறன்களை வளர்க்க அறிவுறுத்தல்: மாணவ மாணவிகளுக்கான இந்த அரையாண்டு தேர்வு விடுமுறையில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளன. இதனை கொண்டாடுவதற்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தப் பண்டிகைகள் மட்டுமல்லாது பள்ளி திறந்த சில நாட்களிலேயே பொங்கல் பண்டிகையையும் வர உள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகளாக புத்தாடைகள் வாங்குவது ,சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது உள்ளிட்ட முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க உள்ளனர்.
விடுமுறையை கொண்டாட்டங்களுக்கு மட்டுமல்லாது பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.புத்தகங்கள் தவிர மாணவர்களின் கைகளில் பெரும்பாலும் புழக்கத்தில் இருப்பது இணைய வசதியுடன் கூடிய செல்போன்கள்.

அவற்றில் பயன் இல்லாத விஷயங்களை கற்றுக் கொள்வதும் அதில் நேரத்தை செலவிடுவதும் தவிர்த்து இணையத்தை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்லாது இணையத்தில் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. ஆசிரியர்கள் கற்றுத் தர முடியாத கல்வியை கூட இணையதளங்கள் தற்போது எளிய முறையில் கற்று தருகின்றன.

அதுபோன்று பள்ளி கல்லூரிகளில் கிடைக்காத கல்வியை இணையத்தில் தேடி கற்றுக் கொள்வதன் மூலம் தங்கள் தனித்திறனை மாணவ மாணவிகள் வளர்த்துக் கொள்ள முடியும் எனவும், புத்தகங்களில் உள்ள படங்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு இனிவரும் காலத்தில் சமூகத்தில் தன்னை தனிமைப்படுத்தி முன்னிலைப்படுத்த முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

எனவே அதற்கு ஏற்றவாறு இணையதளங்களை பயன்படுத்துபவர்கள் அதில் தங்களுக்கு தேவையான தங்கள் தனித் திறனை வெளிப்படுத்தும் வகையான பயனுள்ள தகவல்களை திரட்டி கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

The post அரையாண்டு தேர்வு நிறைவு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட தயாராகும் மாணவ, மாணவிகள் appeared first on Dinakaran.

Related Stories: