அதன்படி, ரூ.25 கோடி மதிப்பிலான நவபாஷாண முருகர் சிலை மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பிலான யானைத் தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை ஆகியவை தங்களிடம் இருப்பதாகவும், பணத்துடன் நேரில் வந்தால் சிலைகளை காண்பிப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, மத்திய வனக்குற்ற தடுப்பு கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் சிலைகளை வாங்குவது போல அங்கு சென்றனர்.
அங்கு சுமார் 10 கிலோ எடையுள்ள நவபாஷாண முருகன் சிலை மற்றும் ஒரு அடி உயரமுள்ள யானை தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை ஆகியவற்றை காண்பித்துள்ளனர். தொடர்ந்து அங்கு சுற்றியிருந்த வனத்துறையினர் அதிரடியாக கண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், வெங்கடேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.25 கோடி மதிப்புள்ள முருகன் கிருஷ்ணர் சிலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.