இந்நிலையில், இரு தரப்பின் அழைப்பை ஏற்று, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், கோயிலை திறந்து பூஜை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது ஒரு தரப்பில் ஆண்களும், ஒரு தரப்பில் பெண்கள் மட்டுமே வந்துள்ளனர். அப்போது பேசிய எம்எல்ஏ இரு தரப்பும் சமாதானமாகி கோயில் திறக்க ஒத்துழைக்க வேண்டும் என்ற போது, ஒரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேசியுள்ளனர். அப்போது, எம்எல்ஏ அருள் குறுக்கிட்டு உங்க வீட்டிலே ஆம்பளைங்களே இல்லையா? என்று கேட்டு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்.
அவரது பேச்சுக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அப்போது, அருள் எம்எல்ஏ அவர்களிடம், ‘இந்த கோயில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கிறது. அதனால், கோயிலை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து, அனைத்து சமுதாய மக்களும் வந்து வணங்கி செல்ல அனுமதிக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், கோயிலை நீங்கள் இரு தரப்பும் இழக்க நேரிடும்’ என்று எச்சரித்தார். ஆனால், அதை ஏற்காமல் அனைவரும் கலைந்து சென்றனர்.
The post உங்க வீட்டிலே ஆம்பளைங்களே இல்லையா? பெண்களை ஆபாச அர்ச்சனையால் இழிவுப்படுத்திய பாமக எம்எல்ஏ appeared first on Dinakaran.