அப்போது சங்கர் தரப்பில், பிடிவாரன்டை திரும்ப பெற வேண்டுமென மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவதாக கூறித்தான் ஜாமீன் பெற்றார். தற்போது வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? மனுதாரரின் செயலை ஏற்கமுடியாது. எனவே, சங்கரை நாளை (டிச. 20) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவேண்டும்’’ என உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சங்கரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.