முகத்தை பளிச்சிட செய்யும் தேங்காய் எண்ணெய்!

நன்றி குங்குமம் தோழி

தேங்காய் எண்ணெயால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய் ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை தொற்றுக் கிருமிகளை அழிக்கவல்லது.
தேங்காய் எண்ணெயில் தலைக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நன்மைகள் தரக் கூடிய ஆற்றல்கள் நிறைந்திருக்கின்றன. தேங்காய் எண்ணெய் முகத்திற்கு எல்லா வகையிலும் பயன்படுகின்றன.
இயற்கையாக கிடைக்கக்கூடிய தேங்காய் எண்ணெயை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தினால் உங்கள் சருமம் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

உங்கள் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சத்தை மீட்டுத்தர தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இக்கலவையை ஸ்கிரப்பராக முகத்திற்கு வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும், வட்டமாக மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளை திட்டுகள், சிறுசிறு முடிகள் நீங்கி முகம் பளிச்சென்று மாறிவிடும்.

குழந்தைகளுக்கு குளித்து முடித்ததும் தலைக்கு மட்டுமல்லாமல் கழுத்தை சுற்றியும், முதுகுப் பகுதியிலும் தேங்காய் எண்ணெயை தடவுவது நல்லது.பலருக்கும் முகத்தில் இருக்கும் அலர்ஜியால் பலவித பிரச்னைகள் உண்டாகிறது. அத்தகைய அலர்ஜியை தேங்காய் எண்ணெயால் போக்க முடியும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இதற்கு பெருமளவு துணை புரியும்.தினமும் காலையில் எழுந்ததும் இந்த எண்ணெயை ஃபேஸ் வாஷ் போல மசாஜ் செய்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் சுத்தமடையும்்.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

The post முகத்தை பளிச்சிட செய்யும் தேங்காய் எண்ணெய்! appeared first on Dinakaran.

Related Stories: