வெற்றி பெற்ற தருணம் உணர்வுபூர்வமாக இருந்தது; சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது: உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி

சென்னை: அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியன் டிங் லின்னை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சிங்கப்பூரில் இருந்து குகேஷ் இன்று சென்னை திரும்பினார். சென்னைக்கு வந்த அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; “வெற்றி பெற்ற தருணம் உணர்வுபூர்வமாக இருந்தது. 14 சுற்றுகளையும் சவாலாக நினைத்து விளையாடினேன். சிறு வயதில் இருந்தே செஸ் விளையாட்டை விரும்பி மகிழ்ச்சியுடன் விளையாடினேன். இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து சூழல்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரும் உதவியாக இருந்தனர்” என உலக செஸ் சாம்பியன் குகேஷ் கூறினார்.

The post வெற்றி பெற்ற தருணம் உணர்வுபூர்வமாக இருந்தது; சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது: உலக செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: