இந்த சூழலில் நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சியினர் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை உருவாக்க ஒன்றிய அரசு விரும்புவதால் விரிவான விவாதத்திற்காக இந்த மசோதா, நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த முக்கிய சட்ட மசோதா குறைந்தது 6 அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த மசோதாக்களை உள்ளடக்கியது என்பதும் அவற்றை நிறைவேற்ற இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் 2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
The post கடும் எதிர்ப்புக்குள்ளான ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் : விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்!! appeared first on Dinakaran.