கனமழை காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கனமழை காரணமாக சென்னையில் 3 சுரங்கபாதைகள் மூடப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் 3 சுரங்கபாதைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, கிண்டி கத்திபாராவிலிருந்து செல்ல கூடிய சுரங்கப்பாதை என 3 சுரங்கபாதைகளும் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதைகளில் தேங்கி உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் வரும் வாகனங்களை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறது.

The post கனமழை காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: