×

3 பேர் சுற்றி வளைத்து கைது

கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மகராஜகடை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(26). இவர், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் அருகே பழைய இரும்பு குடோன் வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு குடோன் முன் வைத்திருந்த 80 கிலோ எடைகொண்ட இரும்பு ராடுகளை 3 பேர் திருடிச் செல்ல முயன்றனர். அதனைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான முத்துக்குமார், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் 3 பேரையும் மடக்கி பிடித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் பழையபேட்டை பெங்காலி தெருவைச் சேர்ந்த கார்த்திக்(21), திலீப்குமார்(24), பூபதி(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையிலடைத்தனர்.

The post 3 பேர் சுற்றி வளைத்து கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Muthukumar ,Krishnagiri Maharajakadai ,Kattanayanapalli Murugan Temple ,
× RELATED 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருவண்ணாமலை ஜோதி குறியீடுடன் 3 கல்வெட்டுகள்