தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டிலிருந்து நந்தினி எழுதிய 2 பக்க உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், எல்லோரும் என்னுடைய இந்த முடிவை மன்னித்து விடுங்கள். நான் நிறைய தப்பு பண்ணிட்டேன். அம்மா, அப்பா உங்களையும் நிறைய அசிங்கப்படுத்தினேன். அதனாலேயே உங்களுடைய அன்பு எனக்கு கிடைக்கவில்லை. அன்பை நம்பி ஏமாந்துவிட்டேன். அதிலிருந்து வெளியே வர படிக்கலாம் என்றால் அம்மாவுக்கும், வேலைக்கு செல்லலாம் என்றால் அப்பாவுக்கும் விருப்பமில்லை.
அதன்பிறகு வேலைக்கு சென்ற இடத்தில் இம்ரானை பார்த்தேன். அவனது அன்பு கிடைத்தது. பின், அவனும் என்னை வேண்டாம் என்றான். அவன் அன்பு இல்லாமல் தவித்து நின்றேன். இம்ரான் அன்பு இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் என் முடிவுக்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனின் அன்பு இல்லை, அம்மா, அப்பாவிடமிருந்து அன்பு, சுதந்திரம் கிடைக்கவில்லை. உங்கள் விருப்பம்போல் செத்து ஒழிகிறேன். எனது இந்த முடிவை இம்ரானுக்கு தெரியபடுத்துங்கள். அவன் என் மீது வைத்துள்ள அன்பு எப்படி என்று புரியும். இப்படிக்கு நந்தினி இம்ரான். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காதலன் அன்பு செலுத்தாததால் விரக்தி பட்டதாரி இளம்பெண் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.