கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு வஞ்சுலீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

 

கரூர், டிச.10: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு கரூர் வஞ்சுலீஸ்வரர் கோயிலில் நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சோமவாரங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஈஸ்வரன் கோயில்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், கரூர் வஞ்சுலீஸ்வரர் கோயிலில் நேற்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு வஞ்சுலீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: