திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: 240 மனுக்கள் பெறப்பட்டன

 

திண்டுக்கல், டிச.10: திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 240 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 240 மனுக்கள் பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 2 பேருக்கு, டாம்கோ திட்டத்தில் 6 பேருக்கு என மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.4.00 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில், கலால் உதவி ஆணையாளர் பால்பாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டை குமார், முருகன், மாவட்டஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம்: 240 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Related Stories: