×

ரூ.61.50 மதிப்பீட்டில் மேல்நிலை தொட்டி அமைக்க பூமிபூஜை

 

திருச்செங்கோடு, டிச.9: திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.61.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை ஈஸ்வரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். திருச்செங்கோடு ஒன்றியம், கருவேப்பம்பட்டி ஊராட்சி நாட்டாம்பாளையம், 58.கைலாசம்பாளையம் ஊராட்சி சுப்பராயன்நகர், ஓ.ராஜபாளையம் ஊராட்சி மாருதி நகர், கருவேப்பம்பட்டி ஊராட்சி ஆத்தூரம்பாளையம், தேவனாங்குறிச்சி ஊராட்சி காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். விழாவில் யூனியன் சேர்மன் சுஜாதா தங்கவேல், அட்மா தலைவர் தங்கவேல், கொமதேக மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.61.50 மதிப்பீட்டில் மேல்நிலை தொட்டி அமைக்க பூமிபூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Tiruchengode ,Easwaran MLA ,Bhumi ,Puja ,Tiruchengode Assembly ,Thiruchengode Union ,Karuveppampatty Panchayat ,Nattampalayam ,58.Kailasampalayam ,Panchayat ,Bhumi Puja ,
× RELATED புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல்