இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை தாங்கி சுமார் 200 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை கூறினார். இதில் அப்துல் சமது எம்எல்ஏ, பேராசிரியர் ஹாஜாங்கனி கோவை உமர் உள்பட தமுமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
The post வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு ரூ.60 லட்சம் நிவாரண உதவி: தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா வழங்கினார் appeared first on Dinakaran.