கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பூண்டு, கேரட் விலை கிடுகிடுவென உயர்வு

சென்னை: வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பூண்டு, வெங்காயம், தக்காளி, சின்ன வெங்காயம், கேரட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த இரண்டு வாரமாக மும்பை, குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வருவதால் உள்ளூர் வரத்து குறைந்து முருங்கைக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சில்லறை வியாபாரிகள் சென்னை மற்றும் புறநகர் கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.550க்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வரத்துக் குறைவால் வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 – ரூ.100க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.60 – ரூ.90க்கும், தக்காளி ரூ.30 – ரூ.60க்கும், கேரட் ரூ.40- ரூ.80க்கும், பூண்டு ரூ.250 ரூ.450க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய், பூண்டு, கேரட் விலை கிடுகிடுவென உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: