பெஞ்சல் புயல் பாதிப்பு விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவு: தமிழ்நாட்டைத் தாக்கிய பெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ.10 லட்சம் வழங்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி முதலமைச்சரிடம் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பெஞ்சல் புயல் பாதிப்பு விசிக சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: