×

கஞ்சா விற்ற இளைஞர் கைது

புதுச்சேரி, டிச. 8: புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தொண்டமாந்தம் பகுதியை சேர்ந்த ரமணா (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் 60 கிராம் கஞ்சா இலை மற்றும் அரிவாள் மறைத்து வைத்திருந்து தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமணா மீது கஞ்சா மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Thondamanatham ,Puducherry Willianur ,station.… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் சபாநாயகர் மீதான...