ரூ.50 லட்சம் பணம் கேட்டு ஒன்றிய அமைச்சருக்கு கொலை மிரட்டல்: காவல்துறை விசாரணை

ராஞ்சி: ஒன்றிய இணையமைச்சர் சஞ்சய் சேத்துக்கு ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மக்களவை உறுப்பினர் சஞ்சய் சேத். இவர் ஒன்றிய பாதுகாப்புத்துறை இணையமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய் சேத்திடம் பணம் கேட்டு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் சேத் கூறியதாவது, “வௌ்ளிக்கிழமை(டிச.6) அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து என் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ரூ.50 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்து என மிரட்டல் விடுத்தார். இந்த கொலை மிரட்டல் பற்றி டெல்லி காவல்துறை மற்றும் ஜார்க்கண்ட் டிஜிபி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். டெல்லி காவல்துறை அதிகாரிகள் என்னை நேரில் சந்தித்து பேசினர். இதுபோன்ற மிரட்டல்கள் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post ரூ.50 லட்சம் பணம் கேட்டு ஒன்றிய அமைச்சருக்கு கொலை மிரட்டல்: காவல்துறை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: