அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி: அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ெதரிவித்தார். திருச்சியில் அவர் இன்று அளித்த பேட்டி: அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உதவி உடற்கல்வி ஆசிரியர்கள் 3000 பேருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளது.

அவர்களுக்கு பணி வழங்கக் கூடிய சூழலில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3000 பேரை பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்வரின் உத்தரவை பெற்று அவர்களுக்கு பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: