ஊத்தங்கரை, டிச.7: ஊத்தங்கரை அருகே, கல்லாவி இனாம்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி ஷோபனா(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், ஷோபனா கோபித்துக்கொண்டு தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 26ம் தேதி, கணவருடன் உள்ள குழந்தைகளை பார்த்து வருவதாக கூறிச் சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. இதுபற்றி விசாரித்த போது, அவர் கணவர் வீட்டுக்கும் செல்லாதது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.
The post திருமணமான இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.