மீனம்பாக்கம்: தமிழ்நாட்டின் ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்கள், கடந்த ஜூன் 26, ஜூலை 1, ஜூலை 11 ஆகிய 3 நாட்களில், நடுக்கடலுக்கு படகுகளில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் இலங்கை கடற் படையினர் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 8 மீனவர்களையும் கைது செய் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள அரசு அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, 8 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்றிரவு கொழும்பில் இருந்து சென்னைக்கு வரும் ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் 8 மீனவர்களயும் அனுப்பி வைத்தனர். சென்னை விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு வந்திறங்கிய தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் சென்னை வருகை appeared first on Dinakaran.