சென்னை: அண்ணா பல்கலை. பாலியல் வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கி உள்ளது.
வன்கொடுமை செயலை கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைப்பதற்கு தேசிய மகளிர் ஆணையம் துணை நிற்கும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இலவசமாக மருத்துவ உதவியும், அப்பெண்ணை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்கவும் தமிழக டிஜிபிக்கு அவர் எக்ஸ் தளத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post அண்ணா பல்கலை. பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்..!! appeared first on Dinakaran.