×

வள்ளுவர் சிலை வெள்ளி விழா 3 நாட்கள் நடைபெறுகிறது

சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30ம் தேதி முதல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல்நாளில் திருக்குறளால் அதிக நன்மை ‘தனிமனிதருக்கே சமுதாயத்திற்கே தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. 2ம் நாள் நிகழ்ச்சியில் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசுகள் வழங்குகிறார். 2ம் நாளன்று மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. திருவள்ளுவர் சிலை விவேகான விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

The post வள்ளுவர் சிலை வெள்ளி விழா 3 நாட்கள் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Silver Festival of Valluvar Statue ,Chennai ,Thiruvalluvar Statue Friday Festival ,Kanyakumari ,Thirukkural ,Valluwar Statue Silver Festival ,Dinakaran ,
× RELATED குமரியில் 30ம் தேதி முதல் ஜனவரி 1 வரை...