- உத்தரகாவி
- ஒடுகத்தூர்
- ஒடுகத்தூர் போலீசார்
- உத்தரகாவிரி ஆறு
- பென்ஜால்
- உத்ரா கவிரி நதி
- மேலரசம்பட்டு
- ஒடுக்கத்தூர்.…
- தின மலர்
ஒடுகத்தூர், டிச.6: ஒடுகத்தூர் உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 தரைப்பாலங்கள் மீண்டும் மூழ்கியதால் போக்குவரத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது பெய்த மழையால் ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் உள்ள உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கத்தாரிகுப்பம்- காளியம்மன்பட்டி, மேலரசம்பட்டு- மடிகம், வண்ணந்தாங்கல்-அம்மனூர், ஒடுகத்தூர்- நேமந்தபுரம் ஆகிய கிராமங்களில் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் அந்த தரைப்பாலங்களை யாரும் கடக்க வேண்டாம் என வருவாய்த்துறை மற்றும் போலீசார் அறிவுறுத்தினர். மேலும், அங்கு தடுப்பு வேலிகளும் அமைத்தனர். பின்னர் படிப்படியாக வெள்ளம் குறைந்ததால் தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு அவ்வழியாக போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில், ஒடுகத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் உத்திரகாவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்து மீண்டும் இந்த 4 தரைப்பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக வேப்பங்குப்பம் போலீசார் அவ்வழியாக போக்குவரத்துக்கு தடை விதித்து பொதுமக்கள் யாரும் தரைப்பாலங்களை கடக்காதபடி தடுப்புகளை அமைத்துள்ளனர்.
The post 4 தரைப்பாலங்கள் மீண்டும் மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை போலீசார் நடவடிக்கை உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.